இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்கள்

இவை அனைத்தும் 18 + அடல்ட்ஸ் படங்கள்(குழந்தைகள் மற்றும் இதயம் பலகீனமானவர்கள் பார்ப்பதையும் மற்றும் இந்த பதிவை வாசிப்பதையும் கண்டிப்பாக தவிர்க்கவும்)

ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ்

1978-ல் வெளிவந்த இந்த படம் 30 நிமிடம் கொடூரமான பாலியல் வன்புணர்வு காட்சியை கொண்டிருந்ததால் சென்சார் போர்டால் இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டது.படத்தின் கதைப்படி கூட்டு பலாத்காரத்தால்(கேங் ரேப்) சித்ரவதைக்கு உள்ளாகி சாவின் விளிம்பு வரை செல்லும் நாயகி பின்னர் உக்கிரமாகி அந்த கயவர்களை வேட்டையாடுவது தான் படத்தின் கதை.

கேனிபல் ஹோலோகாஸ்ட்

1980-ல் வெளிவந்த இந்த படம் இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க அமேசானின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் பல காட்சிகளில் நடிக்கிறார்களா? இல்லை உண்மையிலேயே நடக்கிறதா? என்று நமக்கே சந்தேகம் வரும் அந்த அளவிற்கு படத்தை தத்ரூபமாக எடுத்திருப்பார்கள்.வனவிலங்குகளை கொல்வது,இரத்தக்களரியான வன்முறை காட்சிகள்,கற்பழிப்பு என பல காட்சிகள் கொடூரத்தின் உச்சம்.(இளகிய மனமுள்ளவர்கள் இந்த படத்தை பார்த்தால் மூணு நாளைக்கு தூக்கம் வராது.)

ப்ளூ ஜாஸ்மின்(2013)

இது ஒரு ப்ளாக்-காமெடி வகையை சேர்ந்த நகைச்சுவை திரைப்படம். பல விருதுகளை குவித்த இந்த படம் இந்தியாவில் வெளியாகாமல் போனதற்கு ஒரு சப்பை காரணம் உண்டு.

அது என்னவென்றால் இந்த படத்தில் இடம்பெறும் புகை பிடிக்கும் காட்சிகளில் அறிவிப்பு பலகை போட வேண்டும் என்ற இந்திய சென்சார் போர்டின் கோரிக்கையை ஏற்க மறுத்து படக்குழுவினர் இங்கு திரையிடுவதை கைவிட்டனர்.

ஃபிப்டி சேட்ஸ் டார்கர்(2017)

இந்த படத்தின் முந்தைய பாகமான "ஃபிப்டி சேட்ஸ் ஆப் கிரெய் (2015)" எந்த காரணத்திற்காக தடை செய்யப்பட்டதோ அதே காரணத்திற்காக இந்த பாகமும் இந்தியாவில் வெளியிட சென்சார் போர்டால் தடை செய்யப்பட்டது.

கெட் ஹார்டு(2015)

சென்சார் போர்டால் படத்தின் பல காட்சிகள் வெட்டப்படும் என்ற அபாயத்தை உணர்ந்து பட குழுவினர் இந்த படத்தை இந்தியாவில் திரையிடுவதை கைவிட்டனர்.

நன்றி:கூகிள்(படங்கள்)

நன்றி:18 International Films That Were Banned In India By The Censor Board

 · 

Post a Comment

Previous Post Next Post