உலகின் மிக சிறந்த உளவு அமைப்பு மொசாட் பற்றிய வரலாறு

நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக சிறியதொரு நாடு. இந்தியாவின் பரப்பளவை ஒப்பிடுகையில் இஸ்ரேலின் பரப்பளவை விட நூறு மடங்கு பெரியது இந்தியா. இஸ்ரேல் நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் நெகவ் பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது. உண்மையில் யூதர்களுக்கு உடல் முழுக்க மூளை எனும் வார்த்தை நன்கு பொருந்தும். 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ். இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில் 74% பேர் யூதர்கள் மற்ற 2௦.8% பேர் அரேபியர்கள் ஆவர். எழுத்து வழக்கில் அரசியலமைப்பு சட்டமும் இல்லாத ஜனநாயக நாடு இஸ்ரேல். இஸ்ரேல் நாடு ஹீப்ருவை தேசிய மொழியாக அறிவித்த போதிலும் ஹீப்ரு மொழி பேச்சு வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் ஹீப்ரு மொழியை கொண்டு வர இஸ்ரேல் அரசு முயன்று வருகிறது.

உலகில் படித்த அதிக மேதாவிகள் இங்கு தான் உள்ளனர். உண்மையில் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரம் மிக்கவர்கள் இஸ்ரேல் நாட்டினர் என்றே கூறலாம். ஹிட்லரால் யூதர்கள் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும் பல சோதனைகளை கடந்து தனி ஒரு வீறு நடை போடும் நாடு இஸ்ரேல் நாடு தான். அமெரிக்கா தான் யூதர்களுக்கு தனது பூர்வீக தேசத்தை மீட்டுக் கொடுத்து உள்ளது. பாலஸ்தீன வீரர்களும் அமெரிக்க உள்ளிட்ட நாட்டு வீரர்களை சமாளிப்பதை விட யூதர்களை போரில் சமாளிப்பது மிக கடினம் என்று மனம் திறந்து கூறி உள்ளனர். இசை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எந்த துறையிலும் யூதர்கள் தான் முன்னணியில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை. உலக வர்த்தகத்தில் 7௦% யூதர்களின் கைவசமே உள்ளது. உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், நாகரீக உடைகள், ஆயுதங்கள், சினிமா துறை என பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

சிறிய நாடு பெரிய வளர்ச்சி

பல சிறப்புகளை தன்னுள் அடக்கிய இஸ்ரேல் நாடு இது வரை 12 நோபல் பரிசு பெற்ற நாடு என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டும். கல்லூரியில் சேர வேண்டும் என்றால் முதலில் 5,௦௦௦ டாலர் கொடுத்து ஒரு நிறுவனத்தை துவக்கி 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு தான் 15,௦௦௦ டாலர் ஆக மாற்றினால் தான் கல்லூரியில் இடம் கிடைக்குமாம். உலகில் பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தது தான். உலகில் அனைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பதும் இஸ்ரேல் நாடு தான். ஆனால் அந்த நாட்டிலேயே குழந்தைகள் இதை பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் கொடுக்கல் வாங்கல் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடே இஸ்ரேல் தான்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இந்த நாட்டில் அதிகபட்ச உரிமை உண்டு. பார்வையற்றவர்கள் கூட தடுமாற கூடாது என்பதற்காகவே இந்த நாட்டில் ரூபாய் நோட்டுகள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொருவரின் வீடுகளிலும் கணினி இருக்கும். நாட்டில் 24% பேர் பட்டம் பெற்றவர்கள். இதில் 12 % பேர் முதுகலை பெற்றவர்கள். இஸ்ரேல் நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களில் 55% பேர் பெண்கள் தான். இந்த விசயத்தில் உலகில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல் உள்ளது. விவசாயத்தின் முதுகெலும்பே சொட்டு நீர் பாசனம் தான். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்களால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி கொள்ளும் ஒரே நாடு இஸ்ரேல் தான். ஒரு சிறிய நாட்டில் 3 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளது என்று சொன்னால் சற்று வியப்புக்குரிய ஒரு செய்தியே.

மொசாட் உருவான விதம்

இஸ்ரேல் மக்கள் தொகையில் பரப்பளவில் மட்டுமே சிறியதொரு நாடு ஆனால் ராணுவத்தில் உளவு துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி இஸ்ரேல் தான். மொசாட் உருவான கதை உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஆட்சி புரிந்துக் கொண்டிருந்தது. அங்கே அதிகமாக வாழ்ந்தவர்கள் அரேபியர்கள். யூதர்களின் எண்ணிக்கை மிக குறைவே. அப்போது இருந்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் மறைமுகமாக போர் நடந்துக் கொண்டு தான் இருந்துள்ளது. 

அரபியர்கள் தங்கள் நாட்டில் யூதர்கள் வாழ்வதை விரும்பவில்லை. ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் அரசு யூதர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. உலகம் முழுவதும் வாழ்ந்த யூதர்கள் ஒரு காலக்கட்டத்தில் இஸ்ரேலை நோக்கி வர துவங்கினர். அந்த சமயம் ஜெர்மனியில் சர்வாதிகாரியாக ஹிட்லர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார். ஹிட்லர் நாஜி படையின் மூலம் யூதர்களை லட்சகணக்கில் கொன்றார். ஹிட்லரிடமிருந்து யூதர்களை காப்பாற்ற இஸ்ரேல் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும் முயற்சி செய்ய தயாராக இருந்தனர். அவர்கள் மிகப்பெரிய செலவில் கப்பல்களை வாங்கினர். ஜெர்மனியில் இருந்து இஸ்ரேல் வருவது அந்த சமயத்தில் மிக இக்கட்டான ஒரு சூழலே.

ஒரு புறம் நாஜி படைகள் யூதர்களை தேடி கொண்டிருக்க மறுபுறம் பிரிட்டிஷ் அரசும் யூதர்கள் பெரும் அளவில் வந்து குடியேறுவதை விரும்பவில்லை. இதற்கு பின் உலகில் வாழ்ந்த யூத மக்களை ஒன்றிணைந்து கொண்டு வர வைக்க அமைக்கப்பட்ட ஒரு ரகசிய குழு தான் இந்த உளவு அமைப்பு. இந்த உளவு அமைப்பின் பெயர் மொசாட் லிஅலியா பெட். காலமாற்றத்தில் இந்த அமைப்பு மொசாட்டாக வளர்ச்சி அடைந்தது. இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் அனைத்து தகவல்களும் மொசாட்டின் தலைமையகத்துக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும். ஜேம்ஸ்பாண்ட் படத்தையே மிஞ்சிய நிஜ உலக படம் தான் மொசாட். உலகின் மிகப் பெரிய உளவு அமைப்புகள் சி.ஐ.ஏ. மற்றும் எம்.ஐ.6 க்கு அடுத்த இடத்தில் மொசாட் உள்ளது.

இரண்டாவது உலகப் போர் முற்றுப்பெற்ற மூன்று ஆண்டில் ஐ.நா.வின் ஒப்புதலோடு 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இஸ்ரேலின் மீது அரபு நாடுகள் தாக்குதல் ஏற்படுத்தின. 1949 ஆம் ஆண்டு இந்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜோர்டான் நாடு மேற்குக்கரை என கூறப்படும் ஜோர்டான் நதியின் மேற்குப் பகுதியில் உள்ள பரவலான பகுதியை எடுத்துக் கொண்டது மேலும் மத்திய தரைக்கடலை ஒட்டி இருக்கும் காசாத்துண்டு எனும் பகுதியை எகிப்து எடுத்துக் கொண்டது.

1967 ஆம் ஆண்டு நடந்த போரில் அரபு நாடுகள் தோல்வியை தழுவியது. மேற்குக்கரை மற்றும் காசாத்துண்டு இஸ்ரேலுக்கு சொந்தமானது. இதில் சில பகுதி தான் பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலில் பத்து லட்சம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் அதன் பின் உலகமெங்கும் இருந்த யூதர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். தற்போது ஒன்றரைக் கோடிக்கும் மேல் யூதர்கள் அங்கு உள்ளனர்.சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை.

உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளுக்கும் முன்னோடி என்றே கூறப்படுகிறது இந்த இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பை. உலகிலேயே மிக திறமையான மற்றும் அதிபயங்கரமானதாக அனைவராலும் கருதப்படும் உளவு அமைப்பு மொசாட். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. சிறந்த உளவு அமைப்பு என்று கருதபவராக நீங்களிருந்தால் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. வையே உளவு பார்க்கும் உளவு துறை தான் மொசாட்.

ஆனால் அமெரிக்காவிடம் தான் பயிற்சி பெற்றது மொசாட் ஆனால் இப்போது அமெரிக்கா சி.ஐ.ஏ.வே ஆச்சரியப்படும் அளவிற்கு மொசாட் உள்ளது. இஸ்ரேலுக்கு வரும் காலத்தில் எதிரி ஆவான் என்று மொசாட் யாரையாவது எண்ணினால் ஆரம்பத்திலேயே அந்த அமைப்பை அழித்து விடும். 1972ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள், பயிற்சியாளர்கள் 11 பேர் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்கி விட்டுதான் இஸ்ரேல் அமைதியானது. மொசாட் செய்த அந்த படுகொலைகள் பாலஸ்தீனர்கள் இடையில் பெரும் பயத்தை உண்டாக்கிய ஒரு செயல். இஸ்ரேல் நாடு பாலஸ்தீனர்கள் வாழும் ஊரைச் சுற்றி தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. இது தற்கொலை படை தாக்குதல்களை தடுக்க என்று சொல்வதை விட இந்த தடுப்பு சுவரின் மூலம் 40 லட்சம் பாலஸ்தீனர்களை சிறைவாசிகளாக ஆக்கும் என்பதே மறுக்கமுடியாத நிதர்சனம்.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டில் இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் மேற்கொண்ட ரகசிய படுகொலை வேட்டையின் பெயர் Operation Wrath of God. இஸ்ரேல் மிகச் சிறிய நாடாகவே இருந்த போதிலும் அந்த சிறிய நாட்டை பார்த்து பொருளாதாரத்திலும் மக்கட்தொகையிலும் மிகையாக இருக்கும் மேற்குலக நாடுகள் கூட பயப்படுகிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் மொசாட். இஸ்ரேல் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் கூட எந்த நேரமும் தன்னை அழிக்க காத்துக் கொண்டிருக்கும் அரபு தேசங்கள் மத்தியில் மிகச் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post