இரண்டு முகங்கள் கொண்ட எட்வர்ட் மோர்டிரேக் என்பவருடைய சோகமான கதை..

இரண்டு முகங்கள் கொண்ட எட்வர்ட் மோர்டிரேக்கைப் பற்றிய ஒரு சோகமான கதை 
2007  ஆம் ஆண்டில் எட்வர்ட் மோர்டிரேக் என்பவருடைய புகைப்படம் இணையதளத்தில் பரப்பட்டது. இவரைப் பற்றி 1895 இல் பாஸ்டன் போஸ்டில் என்பவர் வெளியிட்ட ஒரு கட்டுரையில் எட்வர்ட் மோர்டிரேக் தலையின் பின்புறத்தில் கூடுதல் முகத்துடன் பிறந்தார் என்றும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் தனிமையிலே வாழ்ந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.அந்தத் தோற்றம் அவரை மிகவும் துன்புறுத்தியது,எழுத்தாளர் சார்லஸ் லோட்டின் ஹில்ட்ரெத் எழுதிய கதையின்படி, மோர்டிரேக் இறுதியில் விரக்திக்குத் தள்ளப்பட்டு 23 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
 மோர்டிரேக் இங்கிலாந்தின் வசதியான பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தார். ஆனாலும் அவர் பெரும்பாலும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார்.  மேலும் அவர் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும்,அறிஞராகவும் இருந்தார், அவர் அவர் உலக வாழ்க்கை தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்தார்.அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட அவரின் தோற்றத்தை  விரும்பவில்லை, மக்கள் அவரது முகத்தை அன்டோனியஸ் என்ற பண்டைய கடவுளுடன் ஒப்பிட்டனர்.
மோர்டிரேக்கின் தலையின் பின்புறத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே முகமாக காணப்பட்டது. அது ஒரு பெண்ணின் முகத்தைப் போன்று அழகாக இருந்ததாக கூறுகின்றனர்.முன்னால் இருப்பவரின் அசைவுகளை கண்கள் பின்பற்றியதால் உதடுகள் இடைவிடாமல் அசையும்.மோர்டிரேக் சோகமாகவோ அல்லது அழவோ செய்தாள் அந்த முகம் சிரிக்கும், மோர்டிரேக்கின் கூற்றுப்படி, அது அவரின் பிசாசு இரட்டையர் என்று கூறினார். அந்த முகம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்தே இருந்தது. மற்றவர்கள் கேட்க முடியாவிட்டாலும்.இரவில், 'முகம்' இடைவிடாமல் மோர்டிரேக்கிடம் பேசியது, இந்த முகம் நரகத்தைப் பற்றி பேசியது என்று நம்பப்பட்டது. மேலும் அந்த முகம் தீய செயல்களை செய்யத் செய்யத் தூண்டிய தாகவும் கூறப்பட்டது. அந்த செயல்கள் என்ன என்பதை மோர்டிரேக் ஒருபோதும் குறிப்பிடவில்லை, இதற்கு அவரின் முன்னோர்கள் செய்த மன்னிக்க முடியாத சில பாவங்கள் பாவங்கள் தான் காரணம் என்று கூறினார்கள்.
அவரது மருத்துவர்கள், மேன்வர்ஸ் மற்றும் ட்ரெட்வெல் ஆகியோர்,அவர் அனுபவித்த துன்பத்தைப் பற்றி பேசும்போது,மோர்டிரேக் ​​தனது முகத்தை தன்னை கொலை செய்தாவது அழிக்கும் படி கேட்டுக் கொண்டார்.அந்த அளவிற்கு துன்பத்தை அனுபவித்தார் என்று கூறினார்கள்.மருத்துவர்கள் இதுபோன்ற கடுமையான நடவடிக்கையை கருத்தில் கொண்டார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை,  இறுதியில், இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுபட தற்கொலை முயற்சி செய்தார்.அவர் கவனமாகக் கண்காணிக்கப்பட்டாலும், இறுதியில் தற்கொலை செய்து கொண்டார்.தான் அனுபவித்த துன்பங்களையும் சில அறிவுரைகளையும் ஒரு கடிதமாக எழுதி விட்டுச் சென்றார்.அவரின் வேண்டுகோள் படி யாருக்கும் தெரியாத இடத்தில்  பெயர் குறிப்பிடாத கல்லறையில் புதைக்கப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post