தற்செயலாக நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள்


1.பழைய புத்தகம்

அன்னே பாரிஷ் என்னும்  அமெரிக்க நாவலாசிரியர் 1920 களில் பாரிஸில் புத்தகக் கடைகளில்
தனது  கணவருடன் சென்றால்,அப்போது தனது குழந்தை பருவத்தில் படித்த ஜாக் ஃப்ரோஸ்ட் என்னும்
கதை புத்தகம் நியாபகம் வர கடையில் அதே பெயரில் இருந்த  பழைய புத்தகத்தை எடுத்து
கணவனுக்குக் காட்டினாள்,சின்ன வயதில் படித்த புத்தகத்தை பற்றி அவனிடம் கூறினாள்.
அவரது கணவர் புத்தகத்தை எடுத்து திறந்து பார்க்கும் பொழுது ஒரு ஆச்சரியம்
அந்த புத்தகத்தில்  "அன்னே பாரிஷ், 209 என். வெபர் ஸ்ட்ரீட், கொலராடோ ஸ்பிரிங்ஸ்"
என்ற பெயர் எழுதியிருந்தது.ஆம் இது அன்னேவின் சொந்த புத்தகம்.சிறுவயதில் வைத்திருந்த
அதே புத்தகம்.



2.விடாத விபத்து

2002 ஆம் ஆண்டில், வடக்கு பின்லாந்தில் ஒரே சாலையில் தனித்தனி விபத்துக்கள் நடந்தது.
இரண்டு விபத்திற்கும் சில மணி நேரம் இடைவெளியில் இருவர் இறந்தனர்.
தலைநகர் ஹெல்சின்கிக்கு வடக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஹேவில்
தனது பைக்கில் செல்லும் போது லாரி மோதியதில் ஒருவர் இறந்தார.
அங்கு இருந்து 1.5கி.மீ தொலைவில் மற்றொருவர் விபத்தில் இறந்தார். இந்த இரு விபத்தை
விசாரித்த பொழுது தான் தெரிந்தது இருவரும் சகோதரர்கள் என்றும்,
அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் என்றும் தெரிந்தது.
இது ஒரு தற்செயலான விபத்தாக இருந்தாலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியது. 



3.வரலாற்று இறப்பு

அமெரிக்காவின் நிறுவனர்களில் இருவரான தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ்.ஜெபர்சன் சுதந்திரப் பிரகடனத்தை வடிவமைத்து,அதன் வரைவுகளை ஆடம்ஸுக்குக் காட்டினார், அவர் பெஞ்சமின் பிராங்க்ளின் உதவியுடன் அதைத் திருத்தி மேம்படுத்தினார். இந்த ஆவணத்தை கான்டினென்டல் காங்கிரஸ்
ஜூலை 4, 1776 இல் அங்கீகரித்தது. ஆச்சரியப்படும் விதமாக, ஜெபர்சன் மற்றும் ஆடம்ஸ் இருவரும் இறந்ததும் அதே நாள், ஜூலை 4, 1826 - சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதிலிருந்து சரியாக 50 ஆண்டுகள்.




4.டாக்ஸி

1975 ஆம் ஆண்டில், பெர்முடாவில் ஒரு நபர் மொபட்டில் செல்லும் போது,தற்செயலாக ஒரு டாக்ஸியால் விபத்தில் கொல்லபடுகிறார்.அதன் பின்.ஒரு வருடம் கழித்து அவரது சகோதரர் அதே மொபட்டில் செல்லும் பொழுது ஒரு விபத்தில் உயிரிழந்தார்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விபத்து ஏற்படுத்தியது அதே டாக்ஸி அதே ஓட்டுநர் மற்றும் அதே பயணிகளே அதில் பயணம் செய்தனர்.




5.பழிதீர்க்கும் தோட்டா

1883 ஆம் ஆண்டில், ஹென்றி ஜீக்லேண்ட் தனது காதலியுடனான உறவை முறித்துக் கொண்டார்,இதனால் அந்த மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.அந்த பெண்ணின் சகோதரர் ஹென்றியை கோபத்தில் தனது துப்பாக்கியால் சுட்டார்.அவர் ஹென்றியை கொன்றதாக எண்ணி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.உண்மையில் ஹென்றி கொல்லப்படவில்லை. புல்லட் அவரது முகத்தை கிழித்து கொண்டு ஒரு மரத்தில் பதிந்தது.சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.8 வருடங்கள் கழித்து இடையூறாக இருப்பதால் ஹென்றி அந்த மரத்தை வெட்ட முடிவு செய்தார்,அதில் புல்லட் அப்படியே இருந்தது.அது பிரம்மாண்டமான மரம் மிகவும் வலிமையானதாகவும் இருந்தது வெட்ட முடியவில்லை அதனால் அதை டைனமைட்டுடன் வெடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார்.அவ்வாறு மரத்தை வெடி வைத்து தகர்க்கும் பொழுது அதில் இருந்த புல்லட் ஹென்றி தலையை தாக்கி அவரை கொன்றது.




6.இரட்டையர்கள்

இரட்டை சகோதரர்களான ஜிம் லூயிஸ் மற்றும் ஜிம் ஸ்பிரிங்கர் பிறக்கும்போதே பிரிந்தனர், வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டனர்.ஒருவருக்கொருவர் தெரியாத, இரு குடும்பங்களும் சிறுவர்களுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டன. இருவரில் ஒருவர் தனது 40 ஆவது வயதில் தனக்கு ஒரு சகோதரர் இருப்பதை அறிந்து அவரை காண்பதற்காக தேடி சென்றார்.இருவரும் தங்களை பற்றி பேசிக்கொண்டனர்.அதில் தான் பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரிந்தது.இருவரும் சட்ட அமலாக்கப் பயிற்சியைத் படித்தவர்கள்,இருவரும் இயந்திர வரைதல் மற்றும் நெசவு தொழில் செய்கிறவர்கள், மேலும் இருவருடைய முதல் மனைவி பெயரும் லிண்டா. இருவருக்கும் மகன்கள் இருந்தனர், அவர்கள் இருவர் பெயரும் ஜேம்ஸ் ஆலன்.இந்த இரட்டை சகோதரர்கள் தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்தனர் அந்த இரண்டாவது மனைவிகள் பெயரும் பெட்டி,மேலும் அவர்கள் வளர்த்து வந்த செல்ல நாய்கள் பெயரும் டாய்.இது இருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



Post a Comment

Previous Post Next Post