சீனாவை பற்றிய அறிய படாத சில உண்மைகள்


1. கால்பந்து கண்டு பிடித்தவர்கள் சீனர்கள்

 2.200 ஆண்டுகளுக்கு முன்பு விலையாண்ட சூ சூ என்ற விளையாட்டு பின்னர் கால்பந்து ஆக மாறியது இது சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டாகும்.உலகின் முதல் கால்பந்து விளையாட்டு இறகுகள் மற்றும் தலை முடிகளால் நிரப்பப்பட்டு தோலால் செய்த பந்தை வைத்து விளையாடியுள்ளனர்


2. சீனாவின் சில பகுதிகளில் சூரிய உதயம் காலை 10 மணி வரை இருக்கும்

 சீனா உலகின் மிக பெரிய நாடுகளில் ஒன்று இருந்த போதிலும் ஒரே ஒரு நேர மண்டலம் மட்டுமே உள்ளது.அதுவே நிலையான சீன நேரம். இதன் பொருள் என்னவென்றால், மேற்கு சீனாவில், சூரிய உதயம் காலை 10 மணி வரை இருக்கலாம்.இதன் பொருள், நாட்டின் தலைநகரில் 6 மணியாக இருக்கும்போது, ​3,000 மைல் தொலைவில் மேற்கு நோக்கி இருக்கும் காஷ்கரில் சுமார் 6 மணி இருக்கும்.


 3. முதியோர் உரிமைச் சட்டம்

 உங்களின் பெற்றோர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர்களை தனியாக கைவிடாமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கவனித்து கொள்ள வேண்டும்.இது சீனாவின் சட்டங்களில் ஒன்று ஏனென்றால், பல நாடுகளில், பெரியவர்கள் புறக்கணிக்க படுகிறார்கள் அல்லது ஓய்வு இல்லங்களில் வைக்கப்படுகிறார்கள்.

 4. சீனாவின் மிக பெரிய பொருளாதாரம்.

 2014 ஆம் ஆண்டில், சீனப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று நிபுணர்கள் கூறினர்.  இது மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் வாங்கும் திறன் சமநிலைக்கு வரும்போது உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக கருதப்படுகிறது.இருப்பினும், பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும்.


 5.சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டம்

  சீனாவில் புத்தாண்டு மற்ற ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் கொண்டாட படும் தேதியில் கொண்டாடப்படுவதில்லை.இதன் புத்தாண்டு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை கொண்டாடபடுகிறது அதாவது முழு நிலவு முதல் அமாவாசை வரும் வரை, எனவே இது ஆண்டுதோறும் வேறுபடுகிறது.சீனாவில் புத்தாண்டு 15 நாட்களுக்கு கொண்டாடப்படும்.

 6. சீனாவின் உலகின் மிகப்பெரிய இராணுவம் உள்ளது

 உலகின் மிகப்பெரிய இராணுவம் அமெரிக்காவில் உள்ளது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தவறு  வலிமைமிக்க வல்லரசு நாடான சீனாவில் 2,183,000 இராணுவப் பணியாளர்கள் உள்ளனர், தேவைப்பட்டால்  அவர்களை போருக்கு அனுப்ப முடியும்.

இது அமெரிக்க  இராணுவத்தில் செயலில் உள்ள இராணுவ வீரர்களை விட கிட்டத்தட்ட 1 மில்லியன் அதிகம்.


 7. சீனாவில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம்

சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கையால் சீனா எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினை இது.  அவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையை மட்டுமே பெற முடியும் என்பதால், நிறைய பெற்றோர்கள் ஒரு மகனை விரும்புகிறார்கள், பெண் குழந்தை பெற்று கொள்வதை அவர்கள் விரும்பவில்லை இதனால் சீனாவில் 30-40 மில்லியன் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ளனர்.


8.சீனாவின் இரயில்வே துறை

 உலகின் பரப்பளவில் சீனா 4 வது பெரிய நாடு, ஆதலால் ரயில்வே நாடு முழுவதும் பரவலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.சீனாவின் இரயில்வே பாதையை கொண்டு பூமியை இருமுறை சுற்றலாம் அந்த அளவிற்கு பெரிய அளவிலான இரயில்வே துறையை கொண்டுள்ளது

 9. அழகு சாதனப் பொருட்கள் விலங்குகள் மீது சோதிக்கப்படுவது கட்டாயமாகும்

சீனாவில் அழகு சாதன பொருட்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது அவ்வாறு  தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சீன அரசாங்கம் சட்டம் கொண்டுள்ளது.அதாவது அழகுசாதன பொருட்களை தயாரிக்கும் பொழுது அதனை முதலில் விலங்குகளின் மேல் சோதனை செய்யத பின்னரே உற்பத்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சட்டம் உள்ளது.இது விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டமாக கருதப்படுகிறது.


 10. ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு ஒரு புதிய வானளாவிய கட்டடம் கட்டப்படுகிறது

உலகில் அதிகமான மக்கள் தொகை சீனா கொண்டுள்ளது அதே போல் அதிக வானளாவிய கட்டடங்களும் அங்கு உள்ளது.கட்டடங்கள் விரைவாகவும் உயரமாகவும் கட்டப்படுகிறது.இங்கு சராசரியாக 5 நாட்களுக்கு ஒரு வானளாவிய கட்டடம் கட்டப்படுகிறது.

 ஒரு வருடத்தில் (365 நாட்கள்), சீனாவில் குறைந்தது 73 புதிய வானளாவிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது!


 11. சீனாவில் கூகுள்,பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது

 சீனாவில் சில காரணங்களுக்காக கூகுள் மற்றும் பேஸ்புக் தடைசெய்யப்பட்டுள்ளது,இருந்தபோதிலும்  95 மில்லியன் அளவிலான மக்கள் சில விபிஎன் நெட்ஒர்க் செயலியை பயன்படுத்தி பேஸ்புக் உபயோகப்படுத்துகிறார்கள்.இது தவிர்த்து விசாட்,வெய்போ,யூகு துடோ போன்ற செயலிகளை பயன்படுத்துகிறார்கள்.

 யூகு துடோ என்ற யூடியூப்பின் சொந்த பதிப்பைக் கூட அவர்கள் வைத்திருக்கிறார்கள்.


 12. வாங், லி மற்றும் ஜான் ஆகியவை மிகவும் பொதுவான குடும்பப்பெயர்கள்

 சீனாவில் உள்ள மக்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு வாங், லி அல்லது ஜான் அவர்களின் குடும்பப்பெயராக உள்ளது,மொத்த மக்கள் தொகையில் சுமார் 21% விழுக்காடு மக்களுக்கு இது போல் பெயர் இருக்கும் உண்மையில் இது சீனாவின் பாரம்பரிய பெயராக குறிப்பிடப்படுகிறது.



Post a Comment

Previous Post Next Post